1. பா.செயப்பிரகாசத்திற்கு மறுப்பு
(ஷோபா சக்தி)
பா. செயப்பிரகாசம் “யாருக்காகப் பேசுகிறார் அ. மார்க்ஸ்” என்றொரு கட்டுரையை ‘கீற்று’ இணையத்தில் எழுதியிருந்தார். அ.மார்க்ஸ் ‘புத்தகம் பேசுது’ இதழுக்கு வழங்கியிருந்த நேர்காணலை எப்படியெல்லாம் திரிக்க முடியுமோ அப்படியெல்லாம் திரித்து, மேற்கோள்களை எப்படியெல்லாம் சிதைக்கமுடியுமோ அப்படியெல்லாம் சிதைத்து பா.செ. அந்தக் கட்டுரையில் புலிகளுக்கு வக்காலத்து வாங்கியிருந்தார். பல இடங்களில் பா.செயப்பிரகாசம் காலச்சுவடுக் கட்டுரையாளரை மட்டுமல்லாமல் குமுதம் கட்டுரையாளரையும் தாண்டிச் சிந்தித்துள்ளார். ஓவராய் சிந்தித்ததன் விளைவுதான் ராஜீவ் காந்தியைப் புலிகள் கொல்லவில்லையென்ற அவரது புதிய கண்டுபிடிப்பு. சிவராசனுக்கும் அகிலாவுக்கும் தனுவுக்கும் சூசகமாக வீரவணக்கக் குறிப்புகளை புலிகள் தங்களது பத்திரிகைகளில் எழுதியதை பா. செ. அறியாமலிருந்திருக்கலாம். ராஜீவ் காந்தியை எதற்காகக் கொன்றீர்கள் என்ற கேள்விக்கு வன்னிப் பத்திரிகையாளர் மாநாட்டில் பிரபாகரன் தலைகுனிந்ததைக்கூட பா.செ. அறியமாட்டாரா? இதிலே பின்நவீனத்துவம் குறித்து பா.செக்கு விமர்சனம்வேறு. தமிழ்நாட்டில் மதுரை ஆதீனம் மட்டும்தான் இன்னும் பின்நவீனத்துவம் மீது விமர்சனம் வைக்கவில்லை.
என் பின்னூட்டம்: பா.செயபிரகாசம் கதைகளில் வெளிப்படும் யதார்த்தமான மனித நேயமும் மனிதர்களும் கவனிக்கத்தக்க அம்சங்கள். அவரின் அரசியல் குறித்து இப்பொழுதுதான் தெரிந்து கொண்டேன். ஒவ்வொரூ படைப்பாளியும் அவனது அரசியல் நிலைபாடுகளாலும் கருத்துகளாலும் சமூகத்தால் நிராகரிக்கப்படுவதும் மதிப்பீடப்படுவதும் இயல்பாக நடக்கக்கூடியது.
ஈழப் போராட்டம் குறித்து, இன்று புலிகளை மட்டுமே முன் வைத்து, அதாவது ஈழப் போராட்டம் என்றாலே விடுதலை புலிகள் என்று ஒற்றை அடையாளத்தை முன்னிறுத்தும் அரசியல் பார்வையைப் பல எழுத்தாளர்கள் கொண்டுள்ளார்கள். அதற்கு அவர்களே பொறுப்பு.
இன்று உலகம் முழுவதும் விடுதலை புலிகளுக்கும் அவர்களின் "வீரப் போராட்டத்திற்கும்" அங்கீகாரமும் ஆதரவும் கிடைப்பதற்குக் காரணம், புலிகள் மட்டுமே ஆண்மையுடையர்கள், களத்தில் இறங்கி போர்ப் புரியக்கூடிய வீரர்கள் என்கிற வசீகரக் கட்டுமானம் இருக்கிறது. அந்தக் கட்டுமானம் புலிகளின் தவறுகளைச் செல்லாமாகக் கூட கண்டிக்க விடாதபடி மிக இறுக்கமாக கட்டமைக்கப்பட்டுருக்கிறது. இன்று புலிகளைத் தவறாக பேசினாலோ, அல்லது அவர்களுக்கு முரணாகப் பேசினாலோ, "பச்சை துரோகி" என்கிற பெயர் கிடைஇக்கும் அளவிற்கு ஈழப் போராட்டத்தின் மீது புலிகளின் ஆளுமை படிந்துள்ளது.
ஷோபா சக்தி, அ.மார்க்ஸ் போன்றாவர்கள் ஈழப் போராட்டத்தை, புலிகளின் அந்த வசீகரக் கட்டுமானத்தை உடைத்து, நியாயமான அரசியல் அணுகுமுறைகளுடன் வெளிப்படுத்துவதால், பல சிக்கல்கள் எழுந்துள்ளன. புலிகள் மட்டுமே வீரர்கள், உயிர் தியாகம் செய்து தனி ஈழத்திற்காக போராடியவர்கள் என்கிற விமர்சனத்துடன் மட்டுமே ஈழப் போராட்ட்டத்தைக் கடந்து போக வேண்டும் என்கிற அவசியம் சமூகத்தால் வகுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இக்காலக்கட்டத்தில் மீள்பார்வையும் மறுபரிசீலனையும் அவசியம் வேண்டும்.
கே.பாலமுருகன்
மலேசியா
2. எம்.ஜி.ஆர் கொலை வழக்கு: ஷோபா சக்தியின் சிறுகதை
எனது பின்னூட்டம்:
"எம்.ஜி.ஆர் கொலை வழக்கு"
கதைக்கே உரிய சில வசீகரங்களும் சில வெளிப்பாடுகளும் உள்ளடக்கிய கதை. ஷோபா சக்தி எழுதியிருக்கும் கதை என்று அவருடைய கொள்கை அறிந்தவர்கள், "இவன் என்னா எழுதிறப் போறான், புலி எதிர்ப்பு உக்கிரமாக வழியும் களமாக மட்டுமே இருக்கும்" என்று புலம்புவதற்கு எல்லாம் வகையான வசதிகளையும் கதாசிரியர் செய்து கொடுத்திருக்கிறார். இயக்கத்தைச் சேர்ந்தவனைப் பிடித்து வைத்துக் கொண்டு அவனைக் கொலை செய்யத் திட்டமிடும் இடங்களில், புலிகள் மீதான/இயக்கத்தின் மீதான கோபம் வெளிப்படுகிறது.
* எம்.ஜி.ஆர் கொலை வழக்கா? அவர் இயற்கை மரணத்தை எய்தியவர் அல்லவா? படங்களில் கூட காட்டினார்களே, பகவான் கிருஷ்ணர் புல்லாங்குழல் வாசித்துக் கொண்டே அவரது உயிரைக் கொண்டு செல்வது போல. ஆச்சரியத்துடன் யார் அந்த எம்.ஜி.ஆர் அல்லது எம்.ஜி.ஆர் எப்படி இறந்திருப்பார் என்ற கேள்விகளுடன் சட்டென வாசகன் உள்நுழைந்துவிடக்கூடிய வசீகரத்தை ஏற்படுத்தும் தலைப்பு "எம்.ஜி.ஆர் கொலை வழக்கு". இருக்கட்டும், ஷோபா சக்தி கதையின் தலைப்பை "engineering" செய்து மிகத் தந்திரத்துடன் கையாண்டுள்ளார். எம்.ஜி.ஆர் இரசிகர்களை ஆர்வத்திற்குட்படுத்தும் அம்சம்.
*கதைக்குள் நுழைந்தால், கதாசிரியர் நம் முகத்தை ஓங்கி அறைந்து இது நீ நினைக்கும் எம்.ஜி.ஆர் அல்ல என்பது போல இருக்கும். கதையில் மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ எம்.ஜி.ஆர் கொண்டிருந்த அரசியலின் நிலைபாடுகளை விமர்சிப்பது போல இருக்கிறது. எம்.ஜி.ஆர் என்கிற வசீகரத்தின் தேசிய உச்சியின் மேல் தாண்டவம் ஆடுகிறது கதை.
கே.பாலமுருகன்
மலேசியா
Saturday, June 6, 2009
Friday, June 5, 2009
சிறுகதை : மூன்றாவது நாற்காலியின் வெற்றிடம்

1
வாங்கய்யா. . எப்ப வந்தீங்க? வீட்டுல எல்லாம் நல்லாருக்காங்களா? வீட்டுப் பக்கமே வரமாட்டுறீங்க? ஆமாம். . என்னைலாம் பாக்க வந்துட்டாலும் அன்னிக்கு மழையா பெய்து வெள்ளம் வந்து 10 பேரு செத்துப் போயிருவாங்க போல. ஆமாம் இப்பல்லாம் மழையே பேயறது இல்லியே?
சரி பரவால்லே. . நம்மள யாரு பாக்க வரா யாரு வர்றது இல்லேனு பாத்துக்கிட்டா இருக்க முடியும்? வந்து உக்காருங்க. மிலோ குடிப்பீங்களா? ஆமாம் எப்பவும் வந்தா அதைத்தானே குடிப்பீங்க. சாரி, ரொம்ப நாள் கழிச்சி வர்றீங்களே அதான்யா. மறதி ரொம்பயா. இப்பல்லாம் சின்ன வயசுலே இந்த மறதி கோளாறு வந்துர்றுது. வயசான கெழடுக்கு என்ன எளவு வந்துர்ற போது? சாப்பாடு அப்படி. நீங்க உக்காருங்க. நல்லா தாராளமா உக்காந்து சாப்புடுங்க. நீங்க உக்கார்றே அளவெ வச்சித்தான் மத்தவங்களோட நீங்க எப்படிப் பொழங்கறீங்கன்னு சொல்ல முடியும், நல்லா சூத்த நாக்காலிலே வச்சி அமுத்தி உக்காருங்க. கொஞ்ச நேரம் பேசலாம்.
வெளில வெயில் அதிகமா இருக்குலே? ஆமாம் இப்பெல்லாம்தான் மழையே பேய மாட்டுதே.
உள்ளே
வீட்டு முன்னுக்கு எப்பவும் 3 நாக்காலி வைக்கச் சொல்லி அடம் பிடிச்சாரு இருக்கற வரைக்கும். ‘எவனாவது வீட்டுக்கு வருவானுங்க, அவனுக்கு நம்ப செய்யற நல்லது உக்கார நாக்காலி கொடுக்கறதுதான்’ எப்பயும் இப்படிச் சொல்லிட்டு வீட்டு முன்னுக்குத்தான் உக்காந்துருப்பாரு. ரெண்டு நாக்காலி காலியா கெடக்க, ஒன்னுல அவரு உக்காந்திருப்பாரு. அவருகிட்ட பகிர்ந்துக்க பேசிக் கொள்ள நிறைய வார்த்தைங்க இருந்துச்சி. ஏதாவது முனகிகிட்டே இருப்பாரு.
யாராச்சம் கிடைச்சிட்டா அவரு குனம், பேச்சு, உடல்மொழி, எல்லாம் மாறிடும். ரொம்ப உற்சாகமா அங்கயும் இங்கயும் சின்ன பையன் மாதிரி நடந்துகிட்டு வந்தவங்களே கவனிப்பாரு. யாரும் இல்லாத நேரத்துல ‘மழை யேன் இப்பலாம் பேயவே மாட்டுதுனு புலம்பிகிட்டு இருப்பாரு. கதவைத் திறந்து வெளில நிண்டு சாக்கடையில மூத்திரம் பேயுவாரு. ரொம்ப நேரம் யாரும் அவருகிட்ட பேசலான அழ ஆரம்பிச்சிருவாரு. எவ்ள நேரம் அழுவாருன்னு சொல்ல முடியாது. கட்டுப்படுத்த முடியாது. தேம்பி தேம்பி அழுந்துகிட்டு மூனாவது நாக்காலிலே உக்காந்துக்குவாரு. இழுத்து வந்து வீட்டுக்கு உள்ள வச்சி சாப்பாடு கொடுக்க கொஞ்சமாவது பலம் வேண்டும், போங்க.
வீட்டுல அவரெ தனியா விட்டுட்டு எங்கயும் போக முடியாது. கதவெல்லாம் சாத்தி பூட்டிட்டு போனாலும், சட்டை சிலுவாரு எல்லாத்தையும் கழட்டி வீசிட்டு வீடு முழுக்க அசிங்கம் பண்ணி வச்சிட்டு அம்மணமா படுத்துருப்பாரு. இந்தக் கோலத்தெ பாத்தும், அவரெ எப்படித் தனியா வீட்டுல உட்டுட்டு போக முடியும்?

வெளியே
1
எங்க? அந்த வீடா? ஆமாம் இப்படி நேரா போனிங்கனா முன் வாசல்லே பந்தல் கட்டி கூடாரம் போட்டுருப்பாங்க பாருங்க. அங்கத்தான். அங்க போயி அவரு பேரெ சொல்லிக் கேளுங்க சொல்லுவாங்க. வீட்டு முன்னுக்கு மூனு மர நாக்காலி இருக்கும் பாருங்க. ஒன்னு ரொம்பவே அமுங்கிப் போயிருக்கும். மத்தெது ரெண்டும் புதுசு மாதிரி இருக்கும். அங்கத்தான் அவரு வீடு. 5 நாள் ஆச்சே. இப்ப வந்துருக்கீங்க? உறவா இல்லெ கூட்டாளியா? பாக்க வயசான ஆளு மாதிரி இருக்கீங்க, கூட்டாளியாத்தான் இருப்பீங்க. இதுக்கு முன்னெ வந்துருக்கீங்களா அவரெ பாக்க? வந்துருக்கலாமே.
2
ஓ! அந்த மண்ட ஓடியோட கூட்டாளியா நீங்க? என்னா பாக்கறீங்க? ஓ, மண்டெ ஓடினு சொன்னனே அதுக்காகவா? மண்டெ எங்க ஓடப் போது. . மனுசனோட சிந்தனையும் எண்ணமும்தான் ஓடுது. வெயில் மண்டையா பொளந்தா அப்படித்தானே வரும்! சரி. . 5 வீடு தள்ளி போனிங்கனா அவரு வீடு வரும். அங்கப் பாருங்க, முன்னுக்கு பந்தல் கட்டிருக்காங்க. மூன்னு நாக்காலி இருக்கும் பாருங்க. அதுலே நானாவது போய் உக்காந்துருக்கலாம். எனக்குத்தான் மழை வந்தாலே கட்டுல்லே படுத்து தூங்கத்தானே தெரியும்.
அழுக வச்சித்தான் எடுத்தானுங்க. வீட்டுலேந்து மனுசன் ஓடிப் போயிட்டாரு. ஒரு வாரம் கழிச்சி எங்கயோ நகரத்துலே உள்ள, ஆஸ்பித்தல்லே செத்து அழுக வச்சித்தான் எடுத்தாங்களாம். உடம்பெ கழுவும் போது சதைலாம் விலகி, அழுவன நாத்தம் இன்னும் இந்தப் பக்கம் அடிச்சிக்கிட்டு இருக்கு. அதை மோந்து பாத்துக்கிட்டே போங்க. அங்கத்தான் அவரு வீடு.
வெற்றிடம்
மூன்று நாற்காலிகள். கொஞ்சமாய் காற்று. எப்பொழுதாவது மழைப் பெய்யும். கடப்பவர்கள் எப்பொழுதும் போல பைத்தியக்கார யதார்த்தத்துடன் மூன்று நாற்காலியையும் பார்த்துவிட்டுப் போகிறார்கள். அவ்வளவுதான்.
ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா
நன்றி: திண்ணை
bala_barathi@hotmail.com
Thursday, June 4, 2009
மலாயாப்பல்கலைக்கழகத் தமிழ்ப்பேரவையின் ஏற்பாட்டில் தேசிய அளவிலான 24-ஆம் பேரவைக் கதையின் சிறுகதைப் போட்டி (2009/2010)
சிறுகதை எழுத்தாளர்கள் இந்தச் சிறுகதைப் போட்டியில் பங்கெடுத்துக் கொண்டு தமது அடையாளத்தை நிறுவலாம். ஆர்வமுள்ளோர் டைப் செய்யப்பட்டிருப்பின் 4-5 பக்கங்களுள்/ கையெழுத்தாக இருப்பின் 7-9 பக்கங்கள்- ஒரு சிறுகதையை எழுதி பேரவைக்கு அனுப்பி வைக்கலாம். எழுத்து அளவு 12, வரிசைகளுக்கான இடைவெளி 1.0 , பொதுப் பிரிவு மாணவர் பிரிவு என்று இரு பிரிவுகளாக நடத்தப்படுகின்றது. பொதுப்பிரிவில் 12 கதைகளும் மாணவர் பிரிவில் 10 கதைகளும் பரிசுக்குரிய கதைகளாக தேர்ந்தெடுக்கப்படும்.
மாணவர் பிரிவில் 16 வயது முதல் 25 வயது வரை பல்கலைக்கழகம்/ ஆசிரியர் கல்லூரி போன்ற படிப்பகத்தில் பயிலும் மாணர்வர்கள் பங்கெடுத்துக் கொள்ளலாம். பொதுப்பிரிவில் வயது வரம்பின்றி பங்கெடுக்கலாம்.
கதையின் கரு : கடந்த பேரவைப் போட்டி பரிசளிப்பின் போது அதன் நீதிபதியான விரிவுரையாளர் திரு.சபாவதி அவர்கள் தமது நீதிபதி உரையில் இப்படித்தான் கேட்டுக் கொண்டார். “மலேசிய பல்லின சமுதாயத்தை முன்னிறுத்தும் பானியிலான சிறுகதைகளை எழுதுங்கள், எல்லாம் இனத்தையும் கதைக்குள் கொண்டு வந்து மலேசிய கதையை உருவாக்குங்கள் என்று.”
படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி:
ANTOLOGI CERPEN KE-24
PERSATUAN BAHASA TAMIL UNIVERSITI MALAYA
D/A JABATAN PENGAJIAN INDIA
FAKULTI SASTERA DAN SAINS SOSIAL
UNIVERSITI MALAYA
50603 KUALA LUMPUR
படைப்புகளை அனுப்ப வேண்டிய இறுதி நாள் : 31.08.2009

Wednesday, June 3, 2009
கோணங்கியின் நாவலும் ஆளுமை கிறுக்கெடுத்தவர்களும்

கோணங்கியின் நாவலைக் கையில் வைத்துக் கொண்டு பெரிய மேதாவிகள் போல பிரசங்கம் செய்பவர்கள் உண்டு. இந்த நாவலைப் புரிந்து கொள்ள முடியலையா? இது எளிதான பின்நவீனத்துவம்,நவீனத்துவம், கட்டற்ற மொழி அமைப்பு என்று மிகப்பெரிய இலக்கிய ஜாம்பவன்கள் போல போலி முகத்துடன் ஆளுமை சார்ந்த மோகத்திற்காக அலைபவர்கள் உண்டு. (கோணங்கி நாவல் என்று மட்டும் இல்லை, இன்னும் சில நாவல்கள்/பிரதிகளும்தன்)
நவீனத்துவ மாயையில் சிக்கிக் கொண்டவர்கள்தான் அப்படித் தன்னைத் தம்பட்டம் அடித்துக் கொள்வார்கள்..
*புரியவில்லை என்றால் புரியவில்லை என்று சொல்வதற்கு தயங்கி, இன்று பலர் தனது வாசிப்பாளுமையின் உச்சமாக கோணங்கியை அளவுகோளாக வைத்துக் கொண்டு கபட நாடகமாடுகின்றனர்.
*எளிமையான மொழி, சுமாரான கமர்ஷயல் மொழி, கட்டற்ற மொழி,நோக்கமில்லாத அமைப்பை இழந்த மொழி,தரமான மொழி, என்று இலக்கியத்திற்குப் பலவகையான மொழி பயன்பாடு உள்ளன. சிலர் வரித்துக் கொண்டு செயற்கையாக தேர்வுசெய்கிறார்கள்,சிலரின் ஆளுமை அவர்களின் மொழியை அவர்களே உருவாக்கிக் கொள்ளும்படி செய்துவிடுகின்றது. அது செயற்கை அல்ல. மிக பொருத்தமான அவர்களின் அகஉலகம் சார்ந்த யதார்த்தம்.
* எல்லாம் மொழி அமைப்புகளையும் ஒட்டு மொத்தமாக ஒரு வகைக்குள் சேர்த்துவிடமுடியாது.சில இலக்கியவாதிகளின் படைப்புகள் தொடக்கத்திலேயே தனக்கான தனித்துவமான மொழியைக் கண்டறிந்து கொள்கின்றது. அதை அடைய முடியாத வாசகர்களுக்கோ சரி,எழுத்தாளனுக்கோ சரி எந்தப் பாதிப்பும் இல்லை. அது சுயம் சார்ந்த தேர்வு.
* இதையெல்லாம் புறம்தள்ளிவிட்டு, தன் மாய ஆளுமையை முன் வைத்து பிறருக்கு இலக்கிய புத்தி சொல்வதும், பிறரின் வாசிப்பை மலிவுப்படுத்தி பேசுவதுமாக சில நாட்டாமைகள் இருக்கிறார்கள். அவர்களின் வார்த்தைகளில் வரிக்கு வரிக்கு ரஷ்ய எழுத்தாளர்களின் நாவலின் தலைப்பும், கோணங்கியின் நாவல் தலைப்புகளும், நமக்குப் புரியாத ஏதோ ஒரு மொழியில் மிகவும் மாய யதார்த்தமாகப் பேசி புலம்புவார்கள். அல்லது எளிமையான மொழியிலேயே பேசி, 'இவர்களை' நீங்கல் வாசிக்கவில்லையென்றால் உங்கள் இலக்கியம் வளரவே வளராது என்று பிரச்சாரம் செய்து உங்களைத் தட்டிவிட முனைவார்கள்.
*அதுவும் இல்லையென்றால் வாழ்நாள் முழுவதும் பிறரை திட்டிக் கொண்டும், ஒப்பிட்டு தரம் தாழ்த்தி பேசிக் கொண்டும், கேலி கிண்டல் அடித்துக் கொண்டும் சுய இன்பம் அடைந்து கொள்வார்கள். இந்த குனத்தை -சமரசமற்ற சிறந்த ஆளுமை- என்று அடையாளப்படுத்தவும் செய்வார்கள். தங்களுக்குத் தெரிந்த எழுத்தாளரின் பெயரைச் சொல்லி, அவரை வாசித்தால்தான் முடியும் போல என்று மேற்கொள்கள் எல்லாம் காட்டிக் கொண்டு தனது வாசிப்பு களத்தை அம்பலப்படுத்தி மார் தாட்டிக் கொள்வார்கள்.
இவர்களையெல்லாம் கண்டு பல இளம் வாசகர்கள், ஆரம்ப நிலை வாசகர்கள் பயப்பட தேவையே இல்லை. உங்களின் வழியில் நீங்கள் செல்லுங்கள். நல்ல இலக்கிய வாசிப்பை சில நல்ல மூத்த இலக்கியவாதிகளிடமிருந்து பெற்றுக் கொள்ளவும் முயலுங்கள். பிறர் வாசிக்காததை நாம் வாசிக்கவில்லையே என்கிற எண்ணம் அவசியமில்லை. தரமான புத்தகங்கள் நிறையவே இருக்கின்றன. அதைக் கண்டடையுங்கள், வாசியுங்கள். யாருடனும் உங்களை ஒப்பிட்டுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. எழுத்துலகில் யாரும் உரிமையாளர்கள் கிடையாது.
(உரிமையாளர்கள் போல நாடகம் ஆடத் தெரிந்தவர்கள் பலர் உண்டு என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். மெல்ல வளரும் நமது இயல்புக்கு புறம்பாக உடனே வளர்ந்துவிடு, இல்லையென்றால் நீ கோழை என்று தீர்ப்பு வழங்கவும் பலர் இருக்கிறார்கள்- அவர்களைக் கண்டு தயக்கம் வேண்டாம். கமர்ஷியல் புகழையும் இலக்கிய தொடர்புகளும் பத்திரிக்கை பலமும் கொண்ட பலர் அப்படியொரு பிம்பத்தை வரித்துக் கொண்டு தன்னுடைய கூட்டத்துடன் பேசி அலைந்து கொண்டிருக்கிறார்கள். என்றுமே அவர்கள் இலக்கிய/எழுத்துலகின் உரிமையாளர்கள் ஆகிவிட முடியாது.
ஆகையால் கோணங்கி, ஜெயமோகனின் விஷ்னு புரானம் போன்ற தடிப்பான நாவல்களுடன் பெரிய இலக்கிய புலி போல பேசுபவர்களைக் கண்டு முதலில் பயப்பட வேண்டாம். அவர்கள் நம்மைப் போல மிக சாதாரணமானவர்கள்தான். வாசிக்கக் கிடைத்தவர்கள் வாசிக்கட்டும், அதற்காக வாய்ப்பில்லாதவர்களைப் பார்த்து கேலி கிண்டல் அடிப்பதைவிட இருப்பதைக் கொடுத்து அவர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்த முனையலாம்.)

Monday, June 1, 2009
ஜூன் மாத தீராநதி இதழில் -யஸ்மீன் அமாட் திரைப்பட விமர்சனம்
ஜூன் மாத தீராநதி இதழில் எனது சினிமா கட்டுரைப் பிரசுரமாகியுள்ளது.
மலேசிய மலாய் திரைப்பட இயக்குனர் யஸ்மீன் அமாட் அவர்களின் படங்களைப் பற்றிய விமர்சனமாக அக்கட்டுரை மலர்ந்துள்ளது.
யஸ்மீன் அமாட் ஒரு துணிகர இயக்குனராக தமது குரலை ஆளுமையை சினிமாவின் மூலம் பதிவு செய்து வரும் முற்போக்குத்தனம் கொண்ட யதார்த்தவாதி. அவரது "டேலண்ட் டைம்" படம் குறித்தும் முஷ்கின் படம் குறித்தும் எனது கட்டுரை பதிவாகிவுள்ளது.
ஒரு இனத்தின் அடையாளத்தைக் கேள்விக்குள்ளாக்கும் சினிமாதான் மலேசிய மலாய் இயக்குனரான யாஸ்மின் அமாட் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் “முஷ்கின்” மற்றும் “டேலண்ட் டைம்”.
இந்தப் படங்களின் மூலம் வெளிப்படும் காட்சிகள் மலாய்க்கார சமுகத்தின் எதிர்வினைகளையும் கண்டனங்களையும் சம்பாதித்துள்ளன. பெரிய அளவில் பேசப்படவில்லையென்றாலும் யஸ்மின் அமாட் அவர்களின் குரலுக்கு அரசு ரீதியிலிருந்து இன்னமும் எதிர்ப்போ கண்டனமோ வரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். மலேசிய திரைப்பட கலையைக் கலாச்சார தளத்திலும் மதமற்ற மனித பண்பாட்டுத் தளத்திலும் வைத்து நுட்பமான வெளிப்பாடுகளாக ஆக்கப்படுத்தியுள்ளார் யஸ்மின் அமாட் என்கிற துணிகர மலேசிய சினிமாவின் மிகச் சிறந்த அடையாளம். . . . . .
மேலும் வாசிக்க தீராநதி ஜூன் மாத இதழை மறவாமல் பார்க்கவும். . . .
தேவதைகளைத் துரட்டியடித்த பொழுதுகள்
எப்பொழுது என் தேவதைகளைத்
துரட்டியடித்திருப்பேன்?

அம்மா சோறு ஊட்டும்போதெல்லாம்
நிலவிலிருந்து உருகி வெளிவந்த
வெள்ளைத் தேவதை
எப்பொழுது என் உலகிலிருந்து
காணாமல் போயிருப்பாள்?
அம்மா இல்லாமல்
சொந்தமாக சாப்பிட
அடம் பிடித்த ஒரு நாளிலா?

துரட்டியடித்திருப்பேன்?

அம்மா சோறு ஊட்டும்போதெல்லாம்
நிலவிலிருந்து உருகி வெளிவந்த
வெள்ளைத் தேவதை
எப்பொழுது என் உலகிலிருந்து
காணாமல் போயிருப்பாள்?
அம்மா இல்லாமல்
சொந்தமாக சாப்பிட
அடம் பிடித்த ஒரு நாளிலா?
அக்காவின் கைப்பிடித்து
கண்ணு கடை சாலையில்
நடந்தபோதெல்லாம்
எனக்கருகில் நடந்து வந்த
மோகினி தேவதை
எப்பொழுது தொலைந்து போயிருப்பாள்?
அக்கா வேண்டாம் என
தனியாக நடக்கப் பழகிய ஒரு நாளிலா?

அப்பாவுடன் மோட்டார்
சவாரி செய்த பொழுதுகளிலெல்லாம்
என்னைப் பின் தொடர்ந்த
காட்டுத் தேவதைகள் எப்பொழுது ஓடிப் போயிருப்பார்கள்?
அப்பா எனக்கென்று தனி சவாரிக்காக
ஒரு சைக்கிள் வாங்கித் தந்த ஒரு நாளிலா?
நீண்ட நாட்களுக்குப் பிறகு
தனிமை எனக்குள்ளிருந்து
உதிரும் போதெல்லாம்
நான் முன்பு தொலைத்த தேவதைகளெல்லாம்
இப்பொழுது கணக்கிறார்கள்
என் மீது சிறுக சிறுக சுமத்தப்பட்ட
தனிமைகளென.
கே.பாலமுருகன்
Saturday, May 30, 2009
ஷோபா சக்தியுடன் ஒரு நேர்காணல்- விடுதலை புலிகளின் அரசியற் தவறுகள்தான் ஈழப் போராட்டத்தின் தோல்விக்கு காரணம்

ஷோபா சக்தி: ப்ரான்சின் அகதிச் சூழலில் ஊத்தையர்களோடு ஊத்தையனாக விளிம்புநிலைச் சிந்தனைகள், மாற்று அரசியல், தலித் இலக்கியம், கலாச்சாரக் கலைப்பு என்பதாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஷோபா சக்தி, அவரின் ‘ம்’ ‘தேசத்துரோகி’ கொரில்லா’ போன்ற நாவல்களின் மூலம் இன்றளவும் முக்கியமான நாவலாசிரியராகவும் பேரீனவாத கொடுரங்களுக்கும் அதிகாரத்திற்கு எதிராகவும் மிகத் தீவிரமாக செயல்படும் போராட்டவாதியாகவும் அறியப்படுபவர் ஷோபா சக்தி.
அவரின் கட்டுரைகளை வாசிக்க அவரது வலைத்தளத்தை இங்கே பார்க்கலாம். http://www.satiyakadatasi.com/பலர் என்னிடம் ஷோபா சக்தியைப் பற்றி சொன்னபோது, ஏன் அவர் விடுதலை புலிகளுக்கு எதிராகப் பேசுகிறார் என்று கேட்டார்கள். அதற்கான பதில் இந்தக் கேள்வி – பதிலில் கிடைக்கலாம்.
1) உயிருள்ள தடுப்புச் சுவர்களாக மனிதத் தடுப்பரண்களாக மக்களைத் துப்பாக்கிமுனையில் புலிகள் தம்மோடு தடுத்து வைத்திருக்கிறார்கள். புலிகளின் கண்களில் மண்ணைத்தூவிட்டு புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து தப்பிவரும் மக்களைப் புலிகள் சுட்டு வீழ்த்துகிறார்கள் என வன்னியிலிருந்து செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.-ஷோபா
கே.பாலமுருகன்: புலிகள் தனி ஈழத்துக்கான போராட்டத்தில் சொந்த மக்களையே கொள்கிறார்கள் என்பது எப்படி உண்மையென புரிந்து கோள்ள முடியும்? அவை வெறும் செய்தியாகக் கூட இருக்கலாமா? அப்படி உண்மையென்றால் ஈழப் போராட்டமே பொய்யாகிவிடுமே?
ஷோபா சக்தி: புலிகள் மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவதையும் யுத்தப் பிரதேசங்களிலிருந்து மக்கள் தப்பிப்போகாமல் தடுத்து வைத்திருப்பதையும் அய்.நா. அவை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்ற சர்வதேச அமைப்புகள் ஆதாரங்களோடு நிரூபித்திருகின்றன. ஈழத்தின் உண்மையான செய்திகளை அறிவதற்கு புலிகளின் ஊடகங்களையும் குமுதம், விகடன் போன்ற வணிக இதழ்களையும் மட்டும் நம்பியிருக்காமல் சர்வதேச ஊடகங்களையும் தயவு செய்து கவனியுங்கள். நான் புலிகள் மீதான இந்தக் குற்றச்சாட்டை அங்கிருந்து தப்பிவந்த மக்களிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில்தான் சுமத்துகிறேன்.
விடுதலைப் புலிகளின் அரசியற் தவறுகள்தான் ஈழப்போராட்டத்தின் தோல்விக்கு முதன்மைக்காரணம். அவர்கள் இலங்கைப் பேரினவாத அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்திநின்ற சகோதர விடுதலை இயக்கங்களை அழித்ததிலிருந்து இடதுசாரிகளை ஒழித்துக் கட்டியது, வடபகுதியில்
பரம்பரை பரம்பரையாக வாழந்த இஸ்லாமியர்களைக் கொள்ளையிட்டு விரட்டியது, ராஜிவ்காந்தி கொலை, அப்பாவிச் சிங்கள, தமிழ் மக்கள் மீதான
கொலைகள் போன்ற எண்ணற்ற தவறுகளால் ஒரு விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதப் போராட்டமாக ஒரு அரசியல் போராட்டத்தை வெறும் இராணுவத் தந்திரங்களாகச் சீரழித்தார்கள். புலிகளின் தவறுகளுக்கு இன்று தமிழ்மக்கள் வட்டி செலுத்துகிறார்கள். நாங்கள் ஒரு போராட்டத்தைத் தோற்றுவிட்டு நிற்கிறோம்.
2) மறுபுறத்தில் இந்தப் படுகொலைகளுக்குத் துணைபோன ஒருபகுதி யூதர்களை நாஸிகள் பாதுகாக்கவும் செய்தார்கள் என்பது வரலாறு.-ஷோபா
கே.பாலமுருகன்: வரலாற்றில் அதிகாரங்களுக்கு எப்பொழுதும் இரு தலைகள் இருந்தன என்று நினைக்கிறீர்களா? அதிகாரத்தின் உக்கிர கொலை பசியினை வளர்த்துவிட்டது எதுவாக இருக்ககூடும்?
ஷோபா சக்தி:இருதலைகளல்ல அதிகாத்திற்குப் பல தலைகளும் அவற்றிற்கு எண்ணற்ற முகமூடிகளுமுள்ளன. ஒவ்வொரு அரசியல் அதிகாரப் போராட்டங்களுக்குப் பின்னும் வர்க்கம் பண்பாடு பொருளியல் இனவாதம் சாதியம் என எண்ணற்ற ஊடும்பாவுமான சிக்கலான கண்ணிகள் மறைந்துள்ளன. எனவே அதிகாரம் கொலைப் பசி என்ற எளிமையான உச்சரிப்புகளால் நாம் இந்த வரலாற்றுச் சிக்கலகளை அடையாளப்படுத்தவோ கடந்துவிடவோ முடியாது.
3) யுத்தமுனையில் எவ்வளவு மக்கள் சிக்கியிருக்கிறார்கள் என்ற சரியான தகவல் கூட நம்மிடமில்லை. -ஷோபா
கே.பாலமுருகன்: ஊடகங்களின் பசப்பலா? அல்லது போலியான அரசு சார்புடைய இருடடிப்பா? அப்படியென்றால் உண்மையான யுத்த தகவலைத் தெரிந்து கொள்ள மக்கள் எதை நாட வேண்டும்?
ஷோபா சக்தி: அங்கே களத்திலேயிரக்கும் முதன்மைச் சக்திகளான இலங்கை அரசு விடுதலைப் புலிகள் இருவருமே ஒருவருக்கொருவர் சளைக்காத அயோக்கியர்கள், பொய்யர்கள். எத்தனைப் பொதுமக்களைக் கொன்றாவது விடுதலைப் புலிகளைத் துடைத்தெறிய வேண்டுமென்பது அரசின் நோக்கம். அரசின் இந்த நோக்கத்திற்கு இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா போன்ற சர்வதேசக் கொள்ளைக்கார அரசுகளும் உடந்தை. மறுபுறத்தில் மக்களின் பிணங்களை வைத்தே இந்த சர்வதேசக் கொள்ளைக்காரர்களிடம் அனுதாபத்தைப் பெற்றுவிடலாம் என்பது புலிகளின் ஊடகங்களின் நோக்கம். எனவே இருதரப்புகளுமே உண்மையான களநிலவரங்களைச் சொல்வதில்லை. பிபிஸி போன்ற சர்வதேச ஊடகங்களின் தகவல்கள் ஓரளவு சரியாயிருப்பினும் ஒவ்வொரு சர்வதேச ஊடகமும் தான் சார்ந்த அரசின் நலன்களில் நின்றே செய்திகளை வெளியிடுகின்றன என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். மக்களைப் பற்றி எவன் கவலைப்பட்டான்!
4) நான் இப்பொழுது எதாவது ஒரு இயக்கம் சார்ந்தவனோ கட்சி சார்ந்தவனோ கிடையாது.-ஷோபா
கே.பாலமுருகன்: இயக்கம் அவசியமே கிடையாது படைப்பாளனுக்கு இயக்கம் அவனது ஆளுமையை குறைக்கும் என நினைக்கிறீர்களா?
ஷோபா சக்தி: அய்யய்யோ அப்படியெல்லாம் இல்லைங்க. ஒரு படைப்பாளிக்கு மட்டுமல்லாமல் இந்தச் சமூகத்தின் ஒவ்வொரு பிரசைக்கும் அரசியல் ஓர்மையும் இயக்கம் சார்ந்த செயற்பாடுகளும் தேவை என எப்போதும் சொல்லி வருபவன் நான்.
ஆனால் இன்றைய சூழலில் என்னைப் போன்றவர்கள் ஈழத்துக்குப் போய் அரசியற் செயற்பாடுகளில் ஈடுபட முடியாதவாறு புலிகளின் துப்பாக்கிகளும் அரசின் சிறைகளும் எம்மைத் தடுத்து வைத்துள்ளன. வாய்ப்புள்ள சூழல் வரும்போது நான் என்னை இயக்கச் செயற்பாடுகளில் முழுமையாக இணைத்துக்கொள்வேன். இப்போது கூட அய்ரோப்பாவில் சிறு அளவில் குழுக்களாக அரசியற் செயற்பாடுகளை முன்னெடுத்துக் கொண்டுதானிருக்கிறோம். மார்க்ஸிம் கார்க்கி தொடக்கம் ஜெயகாந்தனிலிருந்து இன்றைய குட்டி ரேவதி ஆதவன் தீட்சண்யாவரை இயக்கச் செயற்பாட்டாளர்கள்தான். இயக்கம் படைப்பாளியின் ஆளுமையைக் குறைக்கும் என்பதெல்லாம் சமூக உணர்வற்ற கோழைகளின் கருத்து.
நன்றி: அநங்கம் மலேசிய இலக்கிய இதழ் மே 2009

இந்தியாவுக்காகப் போரிட்டோம்: ராஜபக்சே என்கிற செந்நாயின் வாக்குமூலம்
தினமனியில் வந்த செய்தி:
கொழும்பு, மே 29: விடுதலைப் புலிகளுக்கு எதிராக நாங்கள் நடத்திய போர் எங்களுக்காக மட்டும் அல்ல, இந்தியாவுக்காகவும்தான் என இலங்கை அதிபர் ராஜபட்ச கூறியுள்ளார்.
"தி வீக்' என்ற ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்திருப்பதாவது:
இந்தியாவுக்காக போரிட்டோம்: விடுதலைப் புலிகளுக்கு எதிராக நாங்கள் நடத்திய போர் எங்களுக்காக மட்டும் அல்ல, இந்தியாவுக்காகவும்தான். 18 ஆண்டுகளுக்கு முன்னால் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொன்றவர்களைப் போரில் சண்டையிட்டு வென்று நீதி வழங்கியிருக்கிறோம்.
பயங்கரவாதத்துக்கு எதிராக தெற்காசிய நாடுகள் மேற்கொள்ள வேண்டிய போரை நாங்கள் நடத்தி முடித்திருக்கிறோம். விடுதலைப் புலிகளை நாங்கள் கொன்றுவிட்டதால் இந்திய அரசு அதற்காகப் போர் நடத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.
இந்தியாவுக்கு நன்றி: விடுதலைப் புலிகளுக்கு எதிராக நாங்கள் நடத்திய போரை ஆதரித்த பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் இந்திய மக்களுக்கு எங்களுடைய நன்றி. மற்றெல்லாவற்றையும்விட இந்தியா என்ன நினைக்கிறது என்பதற்கே நாங்கள் முக்கியத்துவம் கொடுத்தோம். இந்திய அரசு எங்கள் பக்கம்தான் என்பதால் மகிழ்ச்சியும் நிம்மதியும் அடைந்தோம்.
விடுதலைப் புலிகளுக்கு இந்தியர்களிடையே குறிப்பாகத் தமிழர்களிடையே ஆதரவு இல்லை என்பதையே நடந்து முடிந்த தேர்தல் காட்டியிருக்கிறது. விடுதலைப் புலிகளை ஆதரித்த கட்சிகள் தோற்றுவிட்டன; எங்களுடைய நடவடிக்கைகளை ஆதரித்த கட்சியும் கூட்டணியும் வென்றிருக்கிறது. புலிகளை ஆதரித்தவர்களைத் தோற்கடித்து தமிழக மக்கள் நல்ல பாடம் புகட்டிவிட்டார்கள்.
புலிகளுக்கு எதிரான போர் முடிந்ததும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பல அரசியல் தலைவர்கள் எங்களைத் தொடர்புகொண்டு பாராட்டினார்கள். அவர்கள் யாரென்று தெரிவிக்க விரும்பவில்லை என்றார் ராஜபட்ச.
//விடுதலைப் புலிகளுக்கு எதிராக நாங்கள் நடத்திய போரை ஆதரித்த பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் இந்திய மக்களுக்கு எங்களுடைய நன்றி.//
"ரஜிவ் காந்தியின் சிலைக்கு
முட்டுக் கொடுக்க
ஈழ மக்களின்
பிணங்கள் பரிசாகக்
கொடுக்கப்பட்டதாம்
சோனியா காந்திக்கு
ராஜ பக்சேவால்"
//18 ஆண்டுகளுக்கு முன்னால் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொன்றவர்களைப் போரில் சண்டையிட்டு வென்று நீதி வழங்கியிருக்கிறோம்.//
அடப்பாவிங்களா. நீதியா? பாண்டிய மன்னன் தவறாக நீதி வழங்கியதற்காக உயிர் துறந்தான், இந்த ராஜ பக்சே செய்த கொலைகளுக்காக எப்பொழுது 10 காசுக்கும் மதிப்பில்லாத அவனது உயிரை விடுவான்? புலிகளின் பேரில் இவன் கொன்று குவித்தது அப்பாவிகளை அல்லவா? எவ்வளவு தந்திரமாக சர்வதேச அளவில் இந்தியாவின் முதுகைச் சொறிந்துவிட துணிந்துள்ளான் இந்த இனப்படுகொலைவாதி.
//புலிகளுக்கு எதிரான போர் முடிந்ததும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பல அரசியல் தலைவர்கள் எங்களைத் தொடர்புகொண்டு பாராட்டினார்கள். //
70 000 உயிர்களைக் கொன்ற அவனுக்குப் பாராட்டுத் தெரிவித்தது தமிழக தலைவர்கள் என்றால் அவர்களின் பெயர்களை வெளீயிட்டுப் பாரும். பிறகு தெரியும் விபரீதம். வெட்கம்கெட்ட அரசியல் இரத்தவெறி செந்நாய்கள், தேர்தல் முடிந்ததும், ராஜ பக்சேவின் உள்ளாடையைக்கூட துவைத்துக் கொடுப்பார்கள்.

Friday, May 29, 2009
சிறுகதை : அப்பா வீடு ('உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது)

1
அவன் வீட்டைச் சுற்றி பார்த்ததும் இதுவரை மனதில் எழுந்து பழகிபோன ஆச்சரியங்கள் சிறுக சிறுக விரிந்து கொண்டேயிருந்தன. எங்கும் பல்லிங்கு கல்லலான தரைகள். நடந்த அனுபவங்கள் குறைவுதான். வெகுநாளாக ஒவ்வாமையாக இருந்து வரும் ஒன்று. ஒவ்வொரு முறையும் அவன் வீட்டின் ஆடம்பரத்தை அணுகும் போதெல்லாம் என் வீட்டின் ஏழ்மை ஒப்பிடுவதற்கு ஏக வசதியாகவே இருந்தது. எப்பொழுதும் தங்கிவிடும் அதே அதிருப்தி.
“20000 ஆயிரம் வெள்ளியா?”
“அப்பறம். . சும்மாவா? எல்லாம் பல்லிங்கு கல்லு. கூலி காசு வேற. .”
:வெலதான், கண்ணாடி ஜன்னலும் அப்பதான் போட்டிங்களா?”
“எல்லாம் ஒரு செட்டுதாண்டா. . இரும்பு கேட்டும் சேர்த்து”
கொஞ்சம் ஆர்வமாக இருந்த முக அடையாளங்களும் இந்த ‘கேட்’ என்ற வார்த்தையைக் கேட்டதும் சோர்வேறிப் போனது.
“யேண்டா ஒரு மாதிரி அலுத்துகிற?”
“இது கேட்டு. எவ்ள அழகா இருக்கு! லட்சணமா, எங்க வீட்லயும் ஒன்னு இருக்கே, அதை நினைச்சேன், அதான்”
“ஓ அதுவா? திறந்தா பாட்டு பாடுமே. . உங்க சேகர் மாமாதானே மோட்டர்ல மோதி நெளிச்சிட்டாறு?”
வருடந்தோறும் தீபாவளி காலங்களில் வர்ணம் பூசி, வீட்டின் முற்புறத்தின் அழகின்மையை ஈடுகட்ட கொஞ்சம் அழகாக இருந்தது அந்த கேட் மட்டும்தான்.
“ வீட்லதான் யாரும் அமைதியா இருந்து பார்த்தில்ல. . இந்தக் கேட்டாவது தொறந்து போட்டாலும் சரி, சாத்தி வச்சிருந்தாலும் சரி, சிவனேனு கெடக்கும், அது எங்க மாமாக்குப் பொறுக்கல போல, அதான்” கொஞ்சம் சளித்துக் கொள்ள நேர்ந்தது.
“சரி நாதன், நான் வர்றேன். .”
அந்த வீட்டை விட்டு விலகும் போது, அங்கு சேகரித்திருந்த ஏக்கங்களையும் சுமந்து கொண்டுதான் போக வேண்டிய சூழ்நிலை. ஒவ்வொரு முறையும் நண்பர்களின் வீட்டில் இப்படிதான் யாருக்கும் தெரியாமல் உள்ளுக்குள்ளே மனம் வருந்தியும் ஏங்கியும் தவித்ததுண்டு.. என் நண்பர்களில் யாராவது ஒருவனுடைய வீட்டோடு ஒப்பிடும் அளவிற்காவது என் வீடு இருந்திருக்கக் கூடாதா?
அப்பா இறந்த பிறகு, வரும்படிக்கே உழைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த வீட்டிலே நிலைக்க வேண்டியதாக போயிற்று. அப்பா இருந்திருந்தாலும் வேறு வீடு வாங்கி போவதற்கும் வழியிருந்திருக்காதுதான். அவர் காலத்தில், அம்மாவைத் திருமணம் செய்து கொண்டு, தனிக் குடித்தினம் போக வேண்டிய நிலையில், வீட்டுக்கே திண்டாடினார்களாம். அத்தை வீட்டில் 30 நாள், சித்தப்பா வீட்டில் 2 மாதம், மேலும் நண்பர்களின் வீட்டில் சில காலம் அண்டிக்கொண்டும் சுற்றி திரிந்தார்களாம். இறுதியாகத்தான் அப்பா ஜப்பான்காரனிடம் வேலைச் செய்யும் போது, சிறுக சிறுக பணம் சேமித்து, அவரே நண்பர்களின் துணையோடு கட்டிய வீடுதானாம் இந்தப் பலகை வீடு.
இந்தக் காரணத்திற்காகத்தான் நாங்கள் வேறு வீடு போகவில்லை என்று சொல்லிவிட முடியாது. குடும்பத்தின் பொருளாதார வசதிக்கேற்பதான் வாழ்க்கையை நிர்ணயித்துக் கொள்ள முடிந்தது. அப்பா கட்டிய இந்தச் சின்ன வீடு எங்களுடைய வசதிக்குத் தாராளமாய் அமைந்து விட்டப்போதிலும், எனகென்னமோ இந்த வீட்டைப் பிடித்ததில்லைதான்.
2

எப்பொழுதும் வீட்டை அடைந்தவுடன், அந்தக் கேட்டைத் திறக்க வேண்டுமே என்ற எரிச்சலும் சங்கடமும் வந்துவிடும்.
“கிரெங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்”
கண்டிப்பாக பக்கத்து வீட்டு ஆச்சி மகன் அறுவறுப்போடு எட்டிப் பார்த்திருப்பான். அவனுக்குக் கொஞ்சம் புன்முறுவல் செய்தாக வேண்டும். அசடு வழிய சிரிப்பை வரவழைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம்.
“வோய், இனி கேட் யூ பிக்கின்லா. . அப்பாலா புடாக் லெலாக்கி.”
(என்னா ஆம்பளெ பையன் நீ, ஒரு கேட்டெ கூட செஞ்சி வைக்க முடிலெ)
அவனும் அடிகடி அம்மாவிற்கு நிகராக மாறிவிடுவான். இரண்டு வீட்டுக்குக் கேட்கும் அளவிற்கு இந்தக் கேட்டைச் சரிசெய்யும்படி அம்மா திட்டியிருக்கக் கூடாதுதான். அதனால்தான் ஊரிலுள்ளவனெல்லாம் தண்டல்காரன் மாதிரி அதிகாரத்துவத்தோடு புத்தி சொல்ல வந்துவிடுகிறார்கள்.
வீட்டு வாசலில் மிகவும் பழமை வாய்ந்த காலணி பெட்டி, சுத்தப்படுத்தி இரு வாரங்கள் இருக்கும், பழுப்பு வர்ணமேறி நின்று கொண்டிருக்கும். இதை எப்படியாவது தூக்கி வீச வேண்டுமென நினைத்தும், அம்மாவுடைய செண்டிமெண்டல் தளத்தில் இந்த அரதபழசான காலணி பெட்டியும் இருந்ததால், என்னுடைய ஒவ்வொரு முயற்சிக்கும் தோல்விதான்.
வெள்ளம் வரும் வீடு என்பதால், அப்பா அந்தப் பெட்டியைக் கொஞ்சம் உயரத்தில் கட்டியிருந்தார். அது அப்பாவுடைய அக்கரையாம். அந்தப் பெட்டிக்குக்கூட அம்மா வீட்டுக்குக் கொடுக்கும் அதே அந்தஸத்தையே கொடுத்திருக்கிறார். அதில் அப்பாவுடைய பழைய ஜப்பான் சிலிப்பரும் களையாமல் அடுக்கப்பட்டிருக்கும்.
“யேண்டா அந்தக் கேட்தான் அப்படி சத்தம் போடுதே. . அத செஞ்சா என்ன உன் குடியா முழுகிற போது? நானும் சொல்லிகிட்டே இருக்கேன். . ஒரு ஆம்பரை எடுத்து அடிச்சி தட்டறதுதான்”
“ஆங்ங். . உங்க மருமகன் தான் இடிச்சாறு. . அங்க போய் சொல்லுங்க. . வீடு மாதிரியா இருக்கு? எங்க பார்த்தாலும் துணி மூட்டை. . உடைஞ்ச அலமாரி. . எதையும் தூக்கி போடாமா வச்சுக்குங்க. .”
என்னுடைய வீட்டுக்கு நான் தவறியும் வீடென்ற அங்கிகாரம் கொடுத்ததில்லைதான். வீட்டின் வரவேற்பறையில், எப்பொழுதும் கப்பை ரொட்டிகளும் அக்கா மகன்களின் உடைந்தும் அம்மாவால் நிராகரிக்கபடாத விளையாட்டுப் பொருள்களும் சிதறிக் கிடக்கும். அம்மாவிற்கு அதை சுத்தப்படுத்துவதும், அக்கா மகன்கள் மீண்டும் அந்த இடத்தை அசுத்தப்படுத்துவதுமாக, இருவருக்கும் மத்தியில் போராட இயலாமல் அந்த வரவேற்பரை இருப்பை இழந்து அழகை துறந்திருந்தது. வாயில் எச்சிலொழுக அக்காளின் கடைசி மகள் அங்குதான் உட்காந்திருப்பாள். இந்த அசௌகரியங்கள் அனைத்தையும் சமாளித்தே என் வீட்டைக் குறித்துச் சளிப்பு தட்டிவிட்டிருந்தது. ஒரு அழகான வீடு வாங்கி தூரமாக ஓடிவிட வேண்டுமென்று கூட தோன்றியதுண்டு.
“மனுசன் வாழ முடியுமா இந்த வீட்டுல. .”
3

ரகு அண்ணன் கேட்டிருக்கிறார், பஞ்சா அக்கா கேட்டுருக்காங்க, லைன் சாரு கேட்டுருக்காரு, மலாய்க்கார அக்காங்க கேட்டுருக்காங்க, மணியன் அப்புச்சியும் கேட்டுருக்கிறார்.
“பாலா. . உங்க வீட்டுக்கு எங்களைலாம் கூப்டவே மாட்டியா? எல்லாம் ஒன்னா வேலை செய்றோம். .”
“அதுக்கென்ன. . கண்டிப்பா கூப்டறன்”
அதுக்கென்ன? என் வீட்டிற்கு இவர்களையெல்லாம் அழைத்துக் கொண்டு போய் உபசரிக்கும் அளவிற்கா என் வீட்டின் நிலைமை தாராளமாய் இருக்கிறது? தவறியும் என் வீட்டைப் பற்றி நான் இவர்களிடம் சொல்லியதில்லை. எந்த காலத்தில் மனிதன் கௌரவத்தைக் காட்டிக் கொடுத்துருக்கிறான். என் வீட்டின் அசுத்தமேறிய காலணி பெட்டியையும், அந்தக் கேட் சத்தத்தையும், அக்கா மகளின் வாணி ஒழுகியே வாடையேறிய வரவேற்பரையையும், இவர்கள் பொறுத்துக் கொள்வார்களா? முதலில் நாகரிகத்திற்காக அமைதியாக இருந்துவிட்டு, பிறகு நிச்சயம் இவர்களுடைய குறை பட்டியல் நீண்டு கொண்டே போகும் என்பதில் சந்தேகமில்லைதான்.
அதுவும் அந்த பஞ்சா அக்காவிற்கு தனியாக அணுகி கற்றுத்தர வேண்டியதில்லைதான். மூச்சுக்கு முண்ணுறு தடவை வீட்டின் சுத்தத்தைப் பற்றியும் தன் வீட்டின் ஆடம்பரத்தைப் பற்றியும் தற்பெறுமை அடித்துக் கொள்ளும் அவருக்கு முன் நான் சிறுமையென அவமானப்பட விரும்பாமல்தான், என் வீட்டைப் பற்றி, ‘பலகை வீடுதான்’ என்ற குறைவான அறிமுகத்திலேயே முடித்துக் கொண்டிருந்தேன். இதில் வீட்டிற்கு அழைத்துச் செல்வதென்றால்? எஞ்சியிருக்கும் மரியாதையாவது தற்காத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம்.
4

“ பாலா அந்தக் கேட்டை கொஞ்சம் செஞ்சிறேண்டா. .”
அம்மாவும் ரொம்பவே இறங்கி வந்துட்டாங்க.
“ மா. . வேற வீடு பார்த்துப் போயிடுலாம் மா. . பெரிய வீடா. . நல்ல வசதியானா வீடா. .அதை விட்டுட்டு. .”
என்னுடைய அலட்சியத்திற்கும் அம்மாவுடைய பிடிவாதங்களுக்கும் எப்பொழுதுமே குறைவில்லைதான். பிறகென்ன? சென்ற வருட வெள்ளத்தில் மீதியிருந்த கீழ்ப்பகுதி பலைகைகளும் பெயர்ந்து கொண்டது.. . 2 லேயரில், மேலே பச்சையும் கீழே பழுப்பும் அசிங்கமாய் கிடக்கும். இதில் அம்மா வெறு, வெள்ளத்தில் நனைந்து நாசமாகியும் அந்த அலமாரி பெட்டியை விட்டொழிக்காமல் இருந்துட்டாங்க. வேணுமென்றே விட்டுடாங்க எனலாம்.
“யாராவது ஏழை பிள்ளைங்களுக்குக் கொடுத்துறலாம்” என்று கூறியே பல மூட்டை தூணிகளைத் தூக்கி வீசாமல், அம்மா அறைக்குள்ளே பதுக்கி வைத்திருந்தார். வெள்ளம் சமயத்தில்தான் அதெல்லாம் தானே குப்பைத் தொட்டிகளுக்கு எகிரி கொண்டிருக்கும். அப்பொழுது மட்டும் வீட்டின் மீது தனி அக்கரை வந்தது போல வீட்டின் அழுக்குக்களைச் சுத்தப்படுத்துவதில் இறங்கிவிடுவார் அம்மா. அந்த நேரத்தில்தான் வெள்ளத்தில் நனைந்து போன அந்த மூட்டைகளையும் சில பொருள்களையும் திருப்தியாக வீட்டிலிருந்து எடுத்து போய், வீசிக் கொண்டிருப்பேன். வெள்ளத்தில் நனைந்திருந்த கேட் அந்தச் சமயத்தில் இன்னும் அதிகமாகவே குளிரில் நடுங்கி கொண்டிருக்கும் கிழவியைப் போல சத்தம் போட்டுக் கொண்டிருக்கும்.
ஒரே ஒரு ஜன்னலின் பலகை மட்டும்தான் இன்னும் 5 மாதத்திற்குத் தாங்கும் திடத்துடன் இருந்தது, மற்றவையெல்லாம் சாத்தியும் பகல் வெயிலையும் மழைச் சாரல்களையும் தாராளமாய் வீட்டினுள்ளே அனுமதித்திருக்கும். இதைச் சரிப் படுத்துவதற்கு முதல் அக்காவிடம் அம்மா பணம் கேட்டிருந்தார். அது வந்த பாடில்லைதான். அந்த வேலையும் அப்படியே மறக்கப்பட்டது. அசௌகரியங்கள் நிறைந்த வீடு, மறதியையும் கற்று தந்திருந்தது.
வேலை முடிந்து வந்து, கொஞ்சம் நேரம் அயர்ந்திருந்தாலும் என் வீட்டின் கேட் எப்படியாவது என்னை எழுப்பிவிடும். அக்காவோ மாமாவோ, யாரு வந்திருந்தாலும், அம்மாவைவிட இந்தக் கேட்டுக்குதான் அக்கரை அதிகம் போலும்! அதே எரிச்சலூட்டும் ‘கிரெங்ங்ங்ங்’ சத்தம்தான்.
“ஐயோ தாயே! இந்த எழவெடுத்த வீட்டுலேந்து என்ன காப்பாத்து. .”
5
கம்பீரமாய் ஆடம்பரத்துடன் கட்டப்பட்டிருக்கும் தாமான் வீடுகளைப் பார்க்கும் போதேல்லாம் மனதில் ஒருவித அடங்க விரும்பாத சளசளப்பு. வேலை முடிந்து வீடு திரும்பும் வேளையில் இந்த மாதிரியான ஆடம்பர வீடுகளையும் வடிவமைப்புடன் அழகாக கட்டப்பட்டிருக்கும் வீடுகளைக் கடக்கும் போதேல்லாம், அந்த ஒவ்வொரு வீடுகளிலும் சில வினாடிகள் வாழ்ந்துவிட்டுதான் வருவேன்.
மின்னியக்கியால் திறக்கப்படும் கேட்களைப் பார்த்து, அந்தக் கேட்டைத் திறப்பவனாக மாறியிருக்கிறேன். வீட்டுக்கு வெளியில் எழுப்பப்பட்டிருக்கும் செயற்கைக் குளத்தில் விளையாடும் குழைந்தைகளின் சிரிப்புக்கு மத்தியில் வாழ்ந்திருக்கிறேன். எத்தனை அழகான வீடுகளில், நொடி பொழுது பயணத்தின் போது, அந்த வீட்டின் முதலாளியாக வாழ்ந்து மறைந்திருக்கிறேன். ஆனால் எல்லாம் கனவுதான்.
“வாங்கனா இந்த மாதிரி வீடுதான் வாங்கனும், இருந்தா இந்த மாதிரி வீட்லதான் இருக்கனும்” என்று பலமுறை பேருந்தின் கன்னாடியில் முகத்தை அப்பிக் கொண்டு பல வீடுகளைப் பார்த்து ஏங்கியதுண்டு. என்றாவது இந்த மாதிரி வீடுகளில் சொகுசு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு, காதை உறுத்தும் கேட் சத்தமில்லாத, அம்மாவின் துணி மூட்டைகள் இல்லாத, பழுப்பேறிய சப்பாத்தி பெட்டி இல்லாத, அக்கா மகன்களின் விளையாட்டுப் பொருள்கள் சிதறிக் கிடக்காத ஒரு பொழுதில் நிம்மதியாக கண் அயர மாட்டேனா? அந்த 23 வயதில் என்னுடைய ஏக்ககங்களுக்கு யாரிடம் நியாயம் பெறுவது என்று தெரியவில்லைதான்.
6
அன்று ஏதோ தைரியம் வந்திருக்க வேண்டும் போல. பக்குவம் நிறைந்த மனிதரின் முகத் தோற்றத்தைக் காட்டிக் கொண்டு அந்தத் தாமான் வீடுகளின் நிர்வாக அறையின் முன் வெகு நேரம் நின்றிருந்தேன். யார் யாரோ என்னைக் கடக்கும் போதெல்லாம் அந்த விசயத்தை எப்படிக் கேட்பது என்று அறியாமலேயே திடிர் பயம் மனதைக் கட்டுப்படுத்துவது போல் அடங்கியிருந்தேன்.
இது 6ஆவது முறை, இப்படி வீடுகளின் விலையை விசாரித்து ஆசுவசப்படுத்த முயல்வது. ஏதாவது ஒரு வீடாவது அமைத்துக் கொள்ள ஏதுவாக இருக்காதா என்ற தவிப்புதான்.
அப்பொழுதுதான் அங்கு ஒரு ஆடவர், அந்த நிர்வாக அறையிலிருந்து வெளியேறி என்னை நோக்கி விரைந்து கொண்டிருந்தார். அவர் அணிந்திருந்த உடையிலேயே, அவர் அந்த இடத்தின் பாதுகாவளர் என்று தெரிந்து கொண்டேன்.
“வணக்கம் சார், யேன் சார் வீடு பத்தி கேட்கனும். . .அதான். .”
“உள்ள போனிங்கனா எல்லாம் விவரமும் தருவாங்க” என்று கூறிவிட்டு என்னை கீழும் மேலுமாக பார்த்துவிட்டு நடக்கத் தொடங்கியவரை, மறுபடியும் நிறுத்தினேன்.
:இல்ல சார், சும்மாதான் விலைலாம் எப்படினு தெரிச்சுக்கதான். .”
என்னுடைய தயக்கத்தை வெகு விரைவில் புரிந்து கொண்டவராய்
“ வீடா தம்பி? இங்க வீடுலாம் 2-3 லட்சம்பா. பார்க்கதான் சின்னது மாதிரி தெரியும், ஆனா எல்லாம் லட்சக் கணக்குதான். . நானும் இங்கதான் வீடு வாங்கியிருக்கன், மகன் வாத்தியார் வேலை செய்யறான், அரசாங்க லோன்தான். .” என்று முடித்துவிட்டு என்னுடைய முகத்தில் தோன்றிய பிரமிப்பையே பார்த்துக் கொண்டிருந்தார்.
சென்றமுறை பார்த்த வீடுகள்கூட 1லட்சம்த்திற்குக் குறையாமல்தான் இருந்தது.
“யேன் சார். . லோன் எடுக்கறதுனா, இந்த வீட்டை வாங்கிறலாமா?”
“ஓ தாராளமா வாங்களாம்பா, செய்யற வேலையைப் பொறுத்துதான் இருக்கு, சாட்சிக்கு ஆளு வேணும், பேங்க்லதான் விண்னப்பம் செய்யனும்பா, இங்க உள்ளவனுங்க மாசாம் இந்த வீட்டுக்கு 1500 வெள்ளிகிட்ட கட்றானுங்க. . நீ என்னா வேலை செய்யறப்பா?” மறுபடியும் என் முகத்தையே பார்த்திருந்தவரின் கண்களில் என் மீதான திடிர் சந்தேகங்கள் எழுந்திருக்கலாம்தான்.
“எனக்கில்ல சார், என் கூட்டாளி ஒருத்தரு விசாரிச்சிட்டு வரச் சொன்னாரு, அதான். . சரி சார்”
அடுத்த கேள்விகளுக்கு என் இருப்பு இடம் தரவில்லைதான் போல. பேருந்தில் அமர்ந்து கொண்டு, அதே கன்னாடியில் முகத்தை அப்பிக் கொண்டேன். இந்தத் தடவை அந்த ஆடம்பர வீடுகளெல்லாம் கண்ணுக்கெட்டாத தொலைவிற்கு சென்று கொண்டிருந்தது போல பிரம்மை தோன்றிய வண்ணமே இருந்தது. மறுபடியும் ஒவ்வாமை.
நான் சொல்லியிருக்கலாம்தான், மெட்ரிக் தொழிற்சாலையில் மாதச் சம்பளம் 800க்கு வேலை செய்து கொண்டிருக்கும் ஒரு அசாதரண ஓப்பிரேட்டர் என்று. அப்படிக் கூறியிருந்தால், ஒரு வேளை அவர் சிரித்திருந்தாலும் ஆச்சரியமில்லைதான்.. மீண்டும் மீண்டும் அதே ஒவ்வாமை.
7

வீட்டை அடைந்தவுடன் செய்வதறியாமல் சுவரோரம் சரிந்து தரையின் சில்லென்ற சொகுசுக்காகக் கீழேயே படுத்துக் கொண்டேன். முதுகில் அந்த இதமான ஈரம் படர்ந்து கொண்டிருந்தது. அப்படியே உடலைக் கிடத்தியிருந்தேன். முன்கதவைத் திறந்து கொண்டு அம்மா உள்ளே வந்தார்.
“வீட்டுக்கு சாயம் அடிக்கனும் பாலா. . வெளுத்துப் போச்சுப்பா. . அப்பாவொடெ நினைவு நாள் வருது. . கொஞ்சம் பெருசா கொண்டாடிரணும்யா. அதும் இந்த வீட்டுலெ கொண்டாடனா அப்பா சந்தோசப்படுவாருயா. .”
அம்மா அந்த வீட்டின் சுவர் முழுவதும் காலத்தைக் கடந்தவராய் ஒட்டி பிணைத்துள்ளார். எப்பொழுதும் இந்த வீட்டைப் பற்றிய புலம்பல் எனக்கு நேரெதிரில் இயங்கிக் கொண்டிருந்தன. அப்படியேதான் படுத்துக் கிடந்தேன். சிறிது நேரத்தில் தூக்கத்தில் தொலைவது போன்ற பிசகலான பிரக்ஞை உருமாறி ஏதோ பகல் கனவில் தடுமாறிக் கொண்டிருந்தேன். ஏதோ ஒரு பாதளத்தில் தவறி வீழ்வது போன்ற நிலை ஏற்பட்டதும், திடிர் விழிப்பு.
வெளியில் ஏதோ சத்தம் ஒலித்துக் கொண்டிருந்தது. முன் வாசல் கேட் அதிறும் சத்தம்தான். மெதுவாக எழுந்து வெளியில் சென்றேன். அம்மா சுத்தியலைக் கொண்டு முன் வாசல் கேட்டுடன் போராடிக் கொண்டிருந்தார். கேட்டைத் திறந்தும் மூடியும் பார்த்துக் கொண்டிருந்தார். கேட் சத்தம் குறைந்திருப்பது போல பட்டது. ஏதும் பேச தோன்றவில்லை.
முடிவு
*உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு நடத்தும் சிறுகதை போட்டிக்கான கதை
கே.பாலமுருகன்
மலேசியா
bala_barathi@hotmail.com
Tuesday, May 26, 2009
ப.மணிஜெகதீசன் கவிதை
அநங்கம் மே இதழில் வெளிவந்த ப.மணிஜெகதீசன் அவர்களின் கவிதை இது. இந்தக் கவிதை மிக எளிமையான சொற்களால் ஹைக்கூ அளவில் அமைந்திருந்தாலும் இதனுள் புதைந்திருக்கும் அழகியலை தேடிக் கண்டடைந்தால் அதன் நிதர்சனம்- யதார்த்த அழகியலை நுகரலாம்.
"கடைசியில் வந்தவன்
முதலாவதாக நிற்கிறான்
சமிக்ஞை விளக்கு
நிறுத்தத்தில்"
-ப.மணிஜெகதீசன்
"கடைசியில் வந்தவன்
முதலாவதாக நிற்கிறான்
சமிக்ஞை விளக்கு
நிறுத்தத்தில்"
-ப.மணிஜெகதீசன்
Subscribe to:
Posts (Atom)