Sunday, June 7, 2009

என்னா பாக்கறே?

இங்க என்னா பாக்கறே?
போய் வேலையே பாரு.
என்னா பொழுது போகலையா?
அப்படி வா வழிக்கு.

ரொம்ப சோர்வா இருந்தா
வா இலக்கியம் பேசலாம்.
அசோகமிதரனின் பாப்பானியசம் பேசலாமா
இல்லெ ஜெயகாந்தனோட சமஸ்கிருத
வசீகரத்தைப் பேசலாமா?
அதுவும் இல்லைனா ஷோபா சக்தியோட
புலி எதிர்ப்பு பத்தி பேசலாமா?
அல்லது கருணாநிதியின் மூக்கு
பத்தி பேசலாம்.
அப்பயும் சோர்வா இருக்கா?
அப்பனா சோனியாவோட
தேசிய கற்பைப் பத்தி அளக்கலாமா?

அப்பயும் முடியலையா
தக்காளி, இருக்கவே இருக்கே
பிரபாகரன் மரணம்.
லூட்டி அடிக்கலாம் வா
வெக்கங்கெட்டவனே.

ஈழப் போராட்டம் பத்தி
இப்பெ என்னா நொட்ட வந்துருக்கே?
என்னாது? தகுதியா?
போர்ப் பயிற்சி எடுத்துருக்கனுமா?
நல்லா வக்கணையா பேசறதுக்குத்தான்
பயிற்சி எடுத்துருக்கெ.
வா உன் மூஞ்சி மேல
காறி துப்ப.

கே.பாலமுருகன்

5 comments:

சென்ஷி said...

பிரதிபலிப்புகள்!!!! :)

நடத்துங்க நடத்துங்க

velji said...

இயலாமை,வெறுமை,கையறுநிலை..எல்லாம் வன்மையாய் வெளிப்பட்டுள்ளது.இன்றைய சூழலுக்கு இதுதான் சரி!

கே.பாலமுருகன் said...

வாங்க சென்ஷி, வேல்ஜி. வந்தனம். பதிவுக்கும் நன்றி.
உலகமே உற்றுக் கவனித்துக் கொண்டிருக்கிற ஒரு விசயத்தை நாமும் ஆழ்ந்து கவனித்துக் கொண்டிருக்கும் போது, யாரோ திடீரென்று தலையில் தட்டி "என்னா பாக்கறே"னு மிரட்டி கேட்டா எப்படி இருக்கும்?

வெறும் திடீர் அதிர்ச்சி மட்டுமே வந்துவிட்டு போகும்

Tamilvanan said...

திட்டு பெறுவதற்கும் தகுதி வேண்டும் என்பது போல் யாரையாவது திட்டுவதற்கு கூட தகுதி ஒன்று வேண்டுமே...
கைகளில் வாள் இருப்பதினால் யார் மீதும் எப்படியும் வீசலாமா...
இனி யார் மீது கோபப்பட்டு என்ன பயன் ? என்னை நான் திருத்திக்கொள்வதை தவிர...

Unknown said...

bayangeramma tthan tidduringe,,,, nenge pulliya? punnaiyya???? sintikke vendiiyya visiyem..