இந்தியாவிற்குப் பயணப்படுகிறேன். நாளை மறுநாள் காலையில் இந்தியாவில் இருப்பேன். மதுரை, திருச்சி, பாண்டிச்சேரி, சென்னை மேலும் சில ஊர்களில் இலக்கிய நண்பர்களையும், தமிழ்த்திரைப்பட இயக்குனர்களையும் சந்தித்து உரையாடும் நோக்கத்தோடு பயணிக்கிறேன். இந்தப் பயணம் அர்த்தமுள்ளதாக அமையும் என்ற நம்பிக்கை உண்டு. முடிந்தவரை மலேசிய இளம் படைப்பாளர்கள் இங்குச் செய்துகொண்டிருக்கும் மாற்று முயற்சிகளை அறிமுகப்படுத்தி அங்குள்ள இளம் படைப்பாளர்களுடன் நல்ல தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு தமிழ் இலக்கியச் சூழலில் செயல்படும் வகையாக என் பயணம் அமையும் என நினைக்கிறேன். 12 நாட்களுக்குப் பிறகு மலேசிய திரும்பியதும் ஒரு வாரம் சிங்கப்பூர் பயணம். அதுவும் இலக்கியம் தொடர்பானதாக அமைகிறது.
இந்தியாவில் உள்ள நண்பர்கள் சந்திக்க ஆர்வமிருப்பின் என்னைத் தொடர்புக்கொள்ளலாம். நாளை இரவுக்குள் தொடர்புக்கொண்டால் மலேசிய எண்ணிலேயே பேசலாம். 0060164806241. எழுத்தாளர் நண்பர்கள் கவிஞர் செல்மா பிரியதர்ஷன் அல்லது ஐயப்பன் மாதவன் அவர்களைத் தொடர்புக்கொண்டு சந்திப்புப் பற்றி தெரியப்படுத்தலாம். மீண்டும் சந்திப்போம். Bye Malaysia......
கே.பாலமுருகன்
No comments:
Post a Comment