நண்பர்களின் கவனத்திற்கு,
வருகின்ற பிப்ரவரி மாதம் வல்லினம் பதிப்பகம்-இதழ் , கலை இலக்கிய விழாவை நடத்தவுள்ளது. தமிழக எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களுமான ஆதவன் தீட்சன்யா மற்றும் அ.மார்க்ஸ் அவர்களும் இவ்விழாவில் சிறப்புரை வழங்கவுள்ளனர். மேலும் மலேசிய இளம் எழுத்தாளர்களின் 4 நூல்களும் விழாவில் வெளியீடப்படும்.
1. கே.பாலமுருகன்-‘தீர்ந்து போகாத வெண்கட்டிகள்’- குழந்தைகள் சினிமாவைப் பற்றிய பதிவுகள்
2. ம.நவீன் – ‘கடக்க முடியாத காலம்’ சமீபத்தில் நவீன் எழுதிய கட்டுரைகள்/பத்திகள் தொகுப்பு
3. சிவா பெரியண்ணன் -‘என்னை நாயென்று கூப்பிடுங்கள்’- கவிதைகள்
4. யோகி – ‘துடைக்கப்படாத இரத்தக் கறைகள்’- பெண்களின் வாழ்வியலைப் பதிவு செய்யும் கட்டுரைகள்
(இதைப் பற்றி ஏற்கனவே நண்பர் நவீன் முகநூலில் தெரிவித்திருந்தார்)
நூல் பற்றிய விவரங்கள்: 4 நூல்களையும் பெற விரும்புபவர்கள் ரிங்கிட் மலேசியா 50 வெள்ளியைச் செலுத்தினால் போதுமானது. உங்களுக்கு 4 நூல்களையும் தபால் வழி அனுப்பிவைக்கப்படும். அல்லது நீங்களே நிகழ்வில் வந்து நூல்களைப் பெற்றுக்கொள்ளலாம். நூல்களைப் பெற விரும்பும் நண்பர்கள் அழைப்பேசியின் வழியாகவோ அல்லது முகநூல் வழியாகவோ எனக்கு தெரியப்படுத்தவும். உங்கள் பெயரைப் பதிந்துகொள்கிறேன்.
மலேசிய படைப்பாகளின் புத்தகங்களுக்கு ஆதரவு தெரிவிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இதன் மூலம் பெறப்படும் அனைத்துத் தொகையும் தொடர்ந்து பல முக்கியமான எழுத்தாளர்களின் நூல்களைச் சிரமம் இல்லாமல் பிரசுரிக்கப் பயன்படுத்தபடும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். நல்ல முயற்சிகளை ஆதரிக்கவும்.
குறிப்பு: தொலைவில் உள்ளவர்களுக்கும் நிகழ்ச்சிக்கு வரமுடியாதவர்களுக்கும் என்னுடைய வங்கி எண் வழங்கப்படும். பணத்தைச் செலுத்தி நூலைப் பெற்றுக்கொள்ளலாம்.
கே.பாலமுருகன்/ தொ.எண்: 016-4806241/ 0060164806241
No comments:
Post a Comment