Wednesday, April 4, 2012

நூல் அறிமுகம் – ஆர்.டி.எம் தொலைக்காட்சி நிகழ்ச்சி

ஆர்.டி.எம் தொலைக்காட்சியிலிருந்து ஒரு குழு என்னை நேர்காணல் செய்தது. மாதந்தோறும் ஒளிப்பரப்பாகும் “நூல் வேட்டை” நிகழ்ச்சிகாகவே அவர்கள் நாவலாசிரியரான என்னைச் சந்தித்தார்கள். ஒரு சில கேள்விகளை மட்டும் முன்வைத்து எங்களின் உரையாடல் நீண்டது. விரைவில் இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும்.



உங்கள் நாவலின் உட்பொருள் என்ன?

பாலமுருகன்: இந்த நாவல் மலேசியத் தமிழர்களின் தோட்ட அவலங்களைப் பதிவு செய்யும் வகையில் எழுதப்பட்டிருந்தாலும், மையப் பிரச்சனையான வறுமையும் கடன் தொல்லையும் மட்டுமே நாவலின் ஆதாரம். பலமுறை கையாளப்பட்ட கதைக்கருவாக இருந்தாலும் நாவல் அதனை நோக்கி பெரும்வாழ்வாக விரிகிறது. ஒரு குடும்பம் கடனாலும் அதிகார வர்க்கத்தின் சுரண்டலாலும் எப்படிச் சிதைந்து போகின்றன என்பதையே நாவல் மையப்பொருளாகப் பெசுகின்றன.

எப்பொழுதிலிருந்து நீங்கள் எழுதுவதில் ஆர்வம் கொண்டீர்கள்?

பாலமுருகன்: நான் முன்பிலிருந்து ஒரு நல்ல வாசகன். கதைகளை விரும்பி வாசிக்கக்கூடியவன். ஆனால் கல்லூரிக்கு வந்த பிறகே மொழி மீதும் இலக்கியத்தின் மீதும் ஆர்வம் அதிகரித்தது. கல்லூரியில் நடந்த சிறுகதை போட்டியில் வெற்றிப்பெற்றதன் வழியாகவே ஓர் எழுத்தாளனாக அடையாளம் பெற்றேன்.

இந்த நாவலுக்கு வேறு என்ன விருதுகள் கிடைத்துள்ளன?

பாலமுருகன்: ஆமாம். மூன்று விருதுகளைப் பெற்ற நாவல் இது. முதலாவதாக சிங்கப்பூர் முஸ்தபா அறக்கட்டளையும் தஞ்சாவூர் பல்கலைக்கழமும் இணைந்து வழங்கிய ‘கரிகாலன் விருது’. அடுத்ததாக சிலாங்கூர் மாநில அரசு வழங்கிய “கலை கலாச்சார விருது- தமிழ் நாவல் பிரிவு” மற்றும் கெடா மாநில இந்திய இளைஞர் இயக்கம், “சிறந்த சாதனை இளைஞர் விருது” ஆகும்.

25th march 2012, Perpustakaan Negara, (National library of Malaysia)

கே.பாலமுருகன்

No comments: