Saturday, June 1, 2013

நான் புகைப்படக்காரன் - 1

மூன்று மாதத்திற்கு முன்புத்தான் நிக்கோன் புகைப்படக்கருவி வாங்கினேன். பல நாள் சேமிப்பிற்குப் பிறகு நிக்கோன் D3200 மட்டுமே வாங்க முடிந்தது. ஏறக்குறைய 8 வருடத் திட்டம் இது. புகைப்படக்கலையில் ஆர்வம் இருந்தும் அதை முறையாகக் கற்றுக்கொள்ள முதலில் ஒருவனுக்கு புகைப்படக்கருவி தேவை.



சராசரியாக நாம் காணும் காட்சிகளை அழகுப்படுத்தி அதன் அற்புதமான தருணங்களை காட்சியாக்கி நிறுத்தி நம்மிடம் காட்டுபவனே புகைப்படக்காரன். சிரிப்பு, அழுகை, நகரம், மரங்கள், மனிதர்கள் என அவனுடைய கண்கள் அலையும் தேசம் அனைத்தையும் உராய்ந்துகொண்டே நகர்கின்றன.



மேலும் பல அரிய புகைப்படங்களுடன் சந்திக்கலாம். வெறும் எழுத்து, சிறுகதை, கவிதைகள், கட்டுரைகள் என இருந்த எனது தேடல் இப்பொழுது குரும்படம், புகைப்படக்கலை எனக் கொஞ்சம் விரிவடைந்துள்ளது.

- கே.பாலமுருகன்

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இதிலும் சிறக்க வாழ்த்துக்கள்...

VIKNESHWARAN ADAKKALAM said...

ஆயிரம் வார்த்தைகள் கொண்ட ஒரு சம்பவத்தை ஒரு புகைப்படம் சொல்லிவிடுமாம்... வாழ்த்துகள் பாலா...