Wednesday, June 26, 2013

தமிழ் மொழி பயிற்சிப் பட்டறைகள் - 2013

மலேசியத் தேர்வு வாரியம் தமிழ் மொழி தாள் 2 ஏற்படுத்திய மாற்றங்களுக்கேற்ப சிறுவர் சிறுகதை எழுதுவது குறித்து நாடெங்கும் சென்று மாணவர்களைச் சந்தித்து பட்டறைகள் வழங்கி வருகின்றேன். கடந்தாண்டு மலாக்கா மாநிலம் சென்று தமிழ் ஆசிரியர்களுக்குச் சிறுகதை பட்டறை வழங்கியதன் விளைவாக பல மாணவர்கள் இலக்கியத்தில் ஆர்வம் கொண்டதோடு சிறுகதை எழுதும் ஆற்றலையும் பெற்றுள்ளனர்.

இந்தாண்டும், பினாங்கு, கெடா, கூலிம் எனப் பல பட்டறைகள் நடத்தினேன். கடந்த வாரம் வெள்ளி, சனிக்கிழமைகளில் ஜொகூர் மாநிலத்திற்குச் சென்று அங்குள்ள துன் அமீனா தமிழ்ப்பள்ளியில் தமிழ் மொழி பயிற்சிப் பட்டறையை வழிநடத்தினேன். மாணவர்கள் கற்பனைவளமிக்கவர்களால இருந்தனர். ஆகையால் அவர்களுக்குப் பயிற்சி வழங்குவதில் எளிமையாக இருந்தது.


முதல் வெள்ளிக்கிழமை காலை 11.00 மணி முதல் 1.00 மணிவரை 70 மாணவர்களுக்குப் பட்டறை வழங்கினேன். அடுத்ததாக, 2.30 மணி முதல் 5.00மணி வரை மேலும் 80 மாணவர்களுக்குப் பட்டறை வழங்கினேன். அப்பள்ளியின் ஆசிரியர்கள் பலரும் பட்டறையில் கலந்து கொண்டார்கள்.

அடுத்த நாள், காலை 8.30மணிக்கெல்லாம் தமிழ் மொழி பட்டறை தொடங்கியது. ஐந்தாம் ஆண்டு மாணவர்கள் 70 பேர் கலந்து கொண்டனர். மாலை 4 மணிவரை அப்பட்டறை தொடர்ந்தது. தெளிவான விளக்கங்கள் கொடுத்து மாணவர்களுக்குப் பயிற்சிகளும் கொடுத்து செம்மைப்படுத்த வாய்ப்புக் கிடைத்தது. கலந்துகொண்ட ஆசிரியர்களும் சரியான தெளிவு பெற்றதாகத் தெரியப்படுத்தினார்கள்.

சிறுவர் சிறுகதை தொடர்பாகவும் தமிழ் மொழி தாள் 2 தொடர்பாகவும் மேலும் மலேசிய முழுக்கப் பயணம் செய்து பட்டறை வழங்கி, மாணவர்களின் கற்பனையாற்றலையும் இலக்கிய ஆற்றலையும் வளர்ப்பதற்காக முயன்று வருகிறேன். என் பட்டறை முழுக்க தேர்வு வாரியத்தின் அடிப்படையில் அமைந்ததாகும்.

தொடர்விற்கு: bala_barathi@hotmail.com / 0164806241

1 comment:

Tamilvanan said...

உங்களது சேவை தொட வாழ்த்துக்கள்