கண்டெடுத்தான் காடு எனும் ஒரு குக்கிராமத்தின் கதை இது. ஒரு பூர்வகுடி சாயலில் வாழும் மக்கள். செங்கல் அறுத்து அதை ஒரு சிறு முதலாளியிடம் விற்று வாழ்க்கையைக் கடத்துகிறார்கள். செங்கல் சூரையில் பெரியவர்கள் முதல் பிள்ளைகள்வரை வெயிலில் காய்ந்தவாறு வேலை செய்கிறார்கள். அவர்கள் கடைசிவரை நம்பி வாழ்வதே அந்த மண்ணையும் மண் கொடுக்கும் செங்கலையும்தான். படம் 1966 ஆம் ஆண்டில் தொடங்குகிறது. புழுதி பறக்கும் கிராமத்தின் மூலையில் இலையுதிர்ந்து நிற்கிறது ஒரு மரம். அரசாங்க வேலை கிடைக்க வேண்டும் என்கிற இலட்சியத்துடன் வாழும் விமல், ஒரு தனியார் அமைப்பின் மூலம் கண்டெடுத்தான் காட்டிற்கு வாத்தியாராக வந்து சேர்கிறார்.
Thursday, October 6, 2011
Tuesday, October 4, 2011
இலக்கியத்தைக் கொல்பவனின் சாட்சியம்: றியாஸ் குரானாவின் கவிதைகள்
“நான் கவிதை சொல்லி, கவிஞனில்லை”- றியாஸ் குரானா
Sunday, October 2, 2011
சிறுகதை: ஒரு மேசை உரையாடல்
“வா மணி!”
“கேங் சண்டன்னா சொல்லு... எறங்கிருவோம்...
இப்படிப் பேச்சுக்குக் கூப்டறது எனக்குச் சரியா படல...”
“ரிலேக் பண்ணு மணி... முனியாண்டி கேங்ல சேர்ந்தோனே
துள்ளற பாரு... முன்ன எங்க இருந்த நீ? கொஞ்சம்
தெரிஞ்சி பேசு...”
“பாங்... இந்தப் பழைய கதைலாம் பேசத்தான்
கூப்டிங்களா?”
“இரு மணி. ஒரு கருப்பு பீரு சொல்லட்டா? டென்ஷன் ஆகாத... சண்டைக்கு வரச் சொல்லல... ஆப்பே ‘ஹீத்தாம்’ சத்து”
“நான் முனியாண்டி,
தியாகு... இப்படி யார் கேங்லயும் இருப்பன். என் மனசுக்கு யாருகிட்ட இருக்கணும்னு
சொல்லும்...”
“ஆமாம் மணி. நீ யாரு... செம்ம ஜாமான்காரன்...”
“இப்ப என்னா குத்திக் காட்டறீங்களா? இந்தக் கஞ்சா தொழிலுக்கு யாரு என்னை இழுத்துக்கிட்டு வந்தது?”
“சரிடா... மணி. நாந்தான். ஆனா, கத்துக்கொடுத்த குருவுக்கே நீ செய்யற பாரு...”
“தொழில்னா எங்க பூர முடியுமா அங்க பூந்துகிட்டுப்
போக வேண்டியதுதான்... இதுல குரு கிருலாம் இல்ல...”
“ஓ... அப்படியா மணி? ஜாலான்
காசுலாம் வாங்கறீயா?”
“தோ பாருங்க பாங். இப்ப நான் உங்க கேங்ல இல்ல.
சும்மா என்ன ஏன் கேள்விக் கேக்குறீங்க? நான் எங்க காசு
வாங்கனா என்ன?”
“எல்லா மறந்துட்டியா மணி? உன் தங்கச்சி சரசு எப்படி இருக்கு? இன்னும் ஜாமான்
விக்குதா?”
“பாங்... அது என் இஷ்டம். என் தங்கச்சி. எங்க
எப்படி வைக்கணும்னு எனக்குத் தெரியும். நீங்க நாட்டாம செஞ்சிக்கிட்டு
இருக்காதீங்க...”
“மணி. ரொம்ப தப்பு பண்ற... நம்ம கேங்ல ஒரு சட்டம்
இருக்கு. பொம்பளைங்கள உள்ள இழுக்கக்கூடாது. அவுங்கள தொந்தரவு செய்யக்கூடாது...
தெரியும்ல?”
“பாங்... நான் உங்க கேங் இல்ல. எதுக்கு உங்க
சட்டத்த நான் மதிக்கணும். வெளாட்டுக் காட்டிக்கிட்டு இருக்காதீங்க... எல்லா கஞ்சா
கைகங்கத்தான்... அப்புறம் என்ன சட்டம் திட்டம்?”
“மணி... நல்லா பேசறடா. ஜாலான் காசு, பொம்பள… அது சரி நான் உன்ன ஏன்
கூப்டன்னா... நம்ம பையன் ஒருத்தன் ‘பாப்’ல ஜாமான் தள்ளிக்கிட்டு இருக்கும்போது கை வச்சிட்டியாம்... நீ அப்படி
ஏதும் செய்யலைன்னா சொல்லிட்டுப் போய்க்கிட்டே இரு...”
“ஆமாம்... கை வச்சன். அவன் என்னா என்ன பாத்து
துரோகின்னு சொல்றான். நான் உன்கிட்ட சொல்லிட்டுத்தானே வெளியானன். எங்க லாபம்
அதிகம் இருக்கோ அங்க போறதுதானே சரி? அப்புறம்
அவனுக்குப் பேச்சு ஓடுது?”
“மணி... அவன் உன்ன விட பல வருசம் கேங்ல நேர்மையா
இருக்கறவன். அவனுக்குக் கெட்கற உரிமை இருக்கு... நீ அவனை அங்க வச்சி அடிச்சது
தப்பு மணி... அது பிசனஸ் பண்ற இடம்...”
“என்னா பாங் பிசினஸ்? ஏதோ அரிசி வியாபாரம் பண்ற மாதிரி பில்டாப்பு கொடுக்குறீங்க... கட்டி
விக்கற நாய்க்கு என்ன ‘எத்திக்ஸ்’?”
இரண்டு துப்பாக்கி சூடுகள் அக்கடையில்
வெடிக்கிறது. அதுவரை மாற்று உடையில் பக்கத்து மேசையில் அமர்ந்திருந்த ‘ஓப்ஸ் பெர்சே’ குழுவின் தலைவர் மாரிமுத்து
கடையிலிருந்து வெளியே வந்து மேலதிகாரிக்குத் தொடர்புக் கொண்டார்.
- கே.பாலமுருகன்
Friday, September 30, 2011
வரலாறும் புகைப்படமும் – 3
மலேசியாவுக்கு வந்து சேர்ந்த புகைப்படக்காரர்கள் பல மாதங்கள் இங்கு இருந்து தங்களின் புகைப்பட ஆய்வையும் வரலாற்றையும் பதிவு செய்தார்கள். குறிப்பாக தோம்சன் எனும் புகைப்படக்காரர் பினாங்கு மாநிலத்தில் 10 மாதங்கள் தங்கி அந்த மாநிலத்தையும் மனிதர்களையும் புகைப்படம் எடுத்துச் சேகரித்தார்.
பிஷோப் சாலையும் அங்கு வாணிபம் செய்து கொண்டிருக்கும் சீனர்களும். யாரோ ஒரு முக்கியமான நபரின் வருகைக்காக பினாங்கு சாலைகள் விஷேசமான வரவேற்பை மேற்கொண்டிருப்பதைப் போல இருக்கிறது. பினாங்கு மாநிலம் 18 ஆம் நூற்றாண்டில் நான்கு பிரிவாக அமைக்கப்பட்டிருப்பதாகத் தகவல் கூறப்படுகிறது. அதாவது Light, Beach, Chuliah and Pitt streets. இன்று “பாடாங் கோத்தா, gurney street” என அழைக்கப்படும் இடங்கள் யாவும் Beach பகுதியைச் சேர்ந்தவை. பினாங்கின் இந்தியர் பகுதி முன்பு Light பகுதியைச் சேர்ந்தவை எனக் கருதப்படுகிறது.
வரலாறும் புகைப்படமும் – 2
நிறைய பேரணிகள் நடந்த நாடு இது.
தொடக்கக் காலத்திலேயே சுதந்திரத்திற்காகவும் எதிர்ப்புணர்வுகளைத் தெரிவிப்பதற்காகவும் நாட்டில் அமைதி பேரணி கையாளப்பட்டே வந்துள்ளது. அதில் முக்கியமானதாக கம்னியுஸ்ட் இயக்கத்திற்கு எதிராக 1950-இல் செமென்யேவில் நடத்தப்பட்டப் பேரணியாகும். 100க்கும் மேற்பட்டோர் இதில் கலந்துகொண்டு தங்களின் எதிர்ப்பை அமைதியான முறையில் வெளிப்படுத்தினர்.
துங்கு அப்துல் ரஹ்மான் நினைவகம்
சமீபத்தில் கோலாலம்பூரில் அமைந்திருக்கும் துங்கு அப்துல் ரஹ்மான் நினைவகத்திற்குச் சென்றிருந்தேன். வரலாற்று தொடர்பான சில தகவல்களைத் திரட்ட முடிந்தது. அங்கே ஒரே தமிழ் அதிகாரியாகப் பணியாற்றும் சென்பகவள்ளி அவர்களைச் சந்தித்து உரையாட முடிந்தது. துன் சம்பந்தன் தொடர்பான தகவல்களைத் திரட்டுவதிலும் மலேசிய வரலாற்றில் தமிழ் மக்களின் பகுதிகளை ஆவணப்படுத்த வேண்டும் என்கிற தேடலிலும் உள்ளவர்.
Tuesday, September 27, 2011
வரலாறும் புகைப்படமும் - 1
புகைப்படங்கள் இல்லாத வரலாற்று நூலால் எந்தப் பயனும் இல்லை எனக்கூறுகிறார் “Malaysia a Pictorical History 1400 – 2004” எனும் வரலாற்று நூலைத் தொகுத்த wendy khadijah Moore.
மலேசியாவில் முதல் முறையாக எடுக்கப்பட்ட புகைப்படம், பினாங்கு மாநிலத்தின் கடற்கரை ஓரமாக இருந்த வீடும் அதனைச் சுற்றிய நிலமும். புகைப்படத்தை எடுத்தவர் K.Feilberg, வருடம் 1860.
பயண புகைப்படக்காரர்கள் மலேசியாவிற்கு 1955ஆம் ஆண்டில்தான் வந்தார்கள். சீன நாட்டின் ஆவணப் புகைப்படங்களையும் அவர்களின் வாழ்வையும் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த தோம்சன் அவருடைய ஆய்வு நோக்கத்திற்காக மலேசியாவிலுள்ள சீன வாழ்வைத் தேடி இங்கு வந்த சேர்ந்த முதல் புகைப்படக்காரர். அதே காலக்கட்டத்தில் பினாங்கு கடற்கரையைச் சுற்றி தங்களின் புகைப்பட ஆவணங்களை K.Feilberg தொடங்கினார். அவர் எடுத்த புகைப்படங்கள்தான் இந்த வரலாற்று நூலில் பதிக்கப்பட்டுள்ளன.
Sunday, September 25, 2011
திரை விமர்சனம்: எங்கேயும் எப்பொழுதும்
பேருந்து பயணம்
இரு பேருந்துகள் எதிரெதிரே மோதிக்கொள்கின்றன. ஏராளனமானவர்கள் இறந்து போகிறார்கள். கவனக்குறைவும் அதிவேகமும் விபத்தையும் மரணத்தையும் இழப்பையும் கொண்டு வருவதை மிகக் கச்சிதமாகச் சொல்லியிருக்கிறார்கள். கதைக்குள் எந்த நெருடலும் இல்லாமல் பொருந்தி வரும் கதைப்பாத்திரங்கள் மிகையில்லாமல் வந்து போகிறார்கள். கட்டாயம் பார்க்க வேண்டிய படம். திருச்சியிலிருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து திருச்சிக்கும் போகும் பேருந்துகள் விழுபுரத்தில் மோதி விபத்துக்குள்ளாகும் காட்சி சாலையில் வாகனத்தைக் கவனக்குறைவாக ஓட்டுபவர்களுக்கான எச்சரிக்கை. நம்மைச் சுற்றி உள்ளவர்கள், நம் அன்பிற்குரியவர்கள் நாம் கார் ஓட்டும்போது நடுக்கத்துடனும் பயத்துடனும் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு அரை மனமாய் இருப்பதைப் பார்த்திருக்கிறீர்களா?
Thursday, September 22, 2011
தேவதையுடன் நெடுந்தூரப்பயணம் (ஜப்பானிய சினிமா – Kikujiro)
"பள்ளி விடுமுறையில்
கோடையையும் மழையையும்
தின்று தீர்க்கும் தனிமையைத்தவிர
வேறொன்றும் இருப்பதில்லை."
கோடையையும் மழையையும்
தின்று தீர்க்கும் தனிமையைத்தவிர
வேறொன்றும் இருப்பதில்லை."
பள்ளி விடுமுறையின் இரண்டாம் நாளில் வீட்டைவிட்டு தன் அம்மாவைத் தேடி செல்லும் மாசோவ் என்ற சிறுவனின் நெடுந்தூரப் பயணம்தான் படத்தின் மையக்கதை. பயணம் நெடுக ரம்மியான இசையும் அற்புதமான காட்சிகளும், வித்தியாசமான மனிதர்களும் வந்து கொண்டே இருக்கிறார்கள். ஜப்பானின் மேற்கு பகுதி முழுக்க சாலை பயணம் செய்தது போன்ற ஓர் உணர்வு மேலிடுவதைத் தவிர்க்க முடியவில்லை. ஜப்பான், தொக்யோ சிறு நகரத்தில் வாழ்பவர்களைப் பற்றிய படங்கள் அதிகம் பார்க்கக் கிடைப்பதில்லை. அகிரா குரோசோவா ஜப்பானிய சமுராய்கள் பற்றியும், மலைவாழ் குடிகள் பற்றியையும், மலையையொட்டிய சிறு சிறு நகரங்கள் பற்றியும் தமது படைப்புகளில் காட்டியுள்ளார். வாழும் இடத்தைக் குறுகிய நேரம் காட்டியிருந்தாலும் இப்படத்தின் சிறுவன் மாசோவ் வாழக்கூடிய சிறு நகரம் அமைதியில் உறைந்து கிடப்பதையும் விடுமுறை காலத்தில் குழந்தைகளை இழந்து நிற்பதையும் காணமுடிகிறது.
Wednesday, September 14, 2011
மலேசிய - சிலாங்கூர் இளைஞர் கலை கலாச்சார விருது-2011
கடந்த வருடம் முதல் மலேசியாவிலுள்ள சிலாங்கூர் மாநிலம் மலேசிய இளைஞர்களின் கலைத்திறன்களை அங்கீகரிக்கும் வகையில் பல பிரிவுகளில் விருதுகள் கொடுத்து வருகின்றது. இந்த விருதளிப்பை சிலாங்கூர் இளைஞர் முன்னேற்ற இயக்கமும் சிலாங்கூர் மாநில விளையாட்டுத்துறையும் இணைந்து வழங்கி வருகின்றன.
தமிழ், ஆங்கிலம், மலாய் மற்றும் சீன மொழிகளைச் சேர்ந்த கலை இலக்கிய படைப்புகளுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
Wednesday, September 7, 2011
சிறுகதை: கோழி தூக்கம்
கடிகாரம் கைப்பட்டு கீழே சரிந்து விழுந்தபோதுதான் முடிவை மாற்றிக்கொண்டேன். நாளை விடுமுறை. வெகுநாட்களுக்குப் பிறகு சிறிதும் பயமில்லாமல் குற்ற உணர்ச்சி இல்லாமல் விடுமுறை எடுக்க மனம் ஒத்துழைத்துள்ளது. நாளைய ஒரு நாளை மட்டும் விட்டுக்கொடுக்கக்கூடாது எனச் சட்டென தோன்றியதில் ஆச்சர்யம். ஒரு கடிகாரம் கீழே விழுவதன் மூலம் என்னிடம் எதையோ சாதித்துவிடுகிறது. அல்லது அந்தச் சத்தம் என் மனதின் இறுக்கங்களைக் கலைத்துவிடுகிறதா?
சன்னல் துணியை இலேசாகத் அகற்றும்போது கீறல் போட்ட காலையின் முதல் வெளிச்சம் இத்துனைக் குளிர்ச்சியாக இருந்ததில்லை. மனம் படர்ந்தது.
Subscribe to:
Posts (Atom)